தி.மு.க. – பா.ஜ. கூட்டணி? நயினார் நாகேந்திரன் விளக்கம்

தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையே கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்து 35 நாட்களே ஆன நிலையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை சீர்குலைந்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

மேலும், கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளிலும் அரசு தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்படாததே குற்றங்கள் அதிகரிக்கக் காரணம் என்றும், முதல்வர் விஜய் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேசி வாங்கி, குதிரைபேரம் நடத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார். இதனால் தேவையற்ற இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டு, அரசு பணம் வீணடிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைப்பது குறித்து, தேர்தல் நேரத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும், வரும் காலம் பா.ஜ.க.வின் காலமாக இருக்கும் என்றும் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version