தவெக நிர்வாகி ஜாதிப்பெயரை சொல்லி தாக்கிய வீடியோ வைரல்

தாக்குதலுக்கு உள்ளான தவெக நிர்வாகி ஆனந்தராஜ்

திருவாரூர் வடக்கு மாவட்ட தவெக செயலாளர் மதனின் சகோதரர், கட்சி நிர்வாகி ஒருவரை ஜாதிப்பெயரை குறிப்பிட்டு தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக மாவட்ட செயலாளர் மதன் மற்றும் மாவட்ட இணை செயலாளர் ஆனந்தராஜ் ஆகியோருக்கு இடையே நீண்ட காலமாகவே உட்கட்சிப் பூசல் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திருவாரூரில் நேற்று வெளியான ஜனநாயகன் திரைப்படத்தை மதனின் சகோதரர் மனோஜ் தனது நண்பர் தமிழ் உடன் இணைந்து பார்த்துள்ளார்.

திரைப்படம் முடிந்து இருவரும் திரையரங்கை விட்டு வெளியே வந்தபோது, மாவட்ட இணை செயலாளர் ஆனந்தராஜ் தரப்பில் விதைப்பந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது, கட்சிக்குள் தனக்கு எதிராக செயல்பட்டதாக கூறி, மனோஜ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆனந்த்ராஜை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், அவரை ஜாதி ரீதியாகவும் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் ஆனந்த்ராஜ் பலத்த காயமடைந்துள்ளார். அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

தாக்குதல் நடத்திய மனோஜ், மதனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சிக்குள் நடக்கும் இந்த உட்கட்சி பூசல்களும், அதன் விளைவாக ஏற்படும் வன்முறைகளும் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதால், இதுகுறித்து கட்சித் தலைமை என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முன்னதாக, ஆனந்தராஜ் தரப்பில் விதைப்பந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மனோஜ் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கட்சிக்குள் தனக்கு எதிராக செயல்பட்டதாக கூறி ஆனந்த்ராஜை மனோஜ் தாக்கியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version