தவெக ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி தொடர்கிறது: மாணிக்கம்தாகூர்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்

தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை பிக்பாஸ் நிகழ்ச்சி போல் இருப்பதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய கருத்துக்களுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பதிலளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சீமானின் கருத்துக்கள் குறித்து பேசுகையில், 'என்டர்டெயின்மென்ட் துறையில் இருந்து வந்ததால் சீமான் எல்லாவற்றையும் பொழுதுபோக்காக பார்க்கிறார். அவர் எல்லாவற்றையும் குறை சொல்ல பிறந்தவர். முதல்முறையாக சட்டமன்றம் நேரலை செய்யப்படுகிறது. இதை நாம் வரவேற்க வேண்டும். தவெக ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அரசியல் ரீதியாக தொடர்ந்து தவறான முடிவுகளை எடுத்து வருகிறார். சீமான் எல்லாவற்றையும் குறையாகப் பார்க்கிறார். பொழுதுபோக்காகப் பார்ப்பதால் அப்படி பேசுகிறார். ரீல்ஸ் எனப்படும் குறுகிய காணொளிகளை கேவலமாக நினைக்கக்கூடாது. ஊடகத்துறையின் அடுத்த பரிணாம வளர்ச்சிதான் ரீல்ஸ். நாடகங்கள், சினிமாக்கள் இருந்தன. விடிய விடிய கட்சிக் கூட்டங்கள் நடந்தன. அந்த காலம் இப்போது முடிந்துவிட்டது. ஒரு விஷயத்தை 30 நொடிகளுக்குள் சுருக்கமாக சொல்லும் பழக்கத்தை ரீல்ஸ் நமக்கு கற்றுக் கொடுக்கிறது. சில விஷயங்கள் ரீல்ஸ் வடிவில் வருவதற்காகவே நடக்கின்றன. இவை காலப்போக்கில் சரியாகிவிடும். ராகுல் காந்திதான் எங்கள் பிரதமர் வேட்பாளர். முதல்வர் விஜய் தொடர வேண்டும், நல்லாட்சியை வழங்க வேண்டும். எங்களை நம்பி வந்தவர்களுக்கு உயிரைக் கொடுப்பதுதான் காங்கிரஸ் கட்சியின் இயல்பான குணம்' என்று அவர் கூறினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version