தரவுகள்தான் இன்றைய உலகின் சொத்து: மாபெரும் திருட்டு திரைப்படம்

உலகில் தங்கத்தை விட, வைரத்தை விட, ஏன் பிரதமர், அதிபர் பதவிகளை விட மதிப்புமிக்கது எது என்று கேட்டால், ஒரு நொடி யோசிக்க வைக்கும் பதில் இந்தத் திரைப்படத்தில் உள்ளது.

நாம் அனைவரும் பயன்படுத்தும் கூகுள், பேஸ்புக், அமேசான், டெஸ்லா போன்ற பெரும் நிறுவனங்கள் கோடிக்கணக்கான சொத்துக்களுடன் எப்படி முதலிடத்தில் இருக்கின்றன? இதற்கான விடையையும் இந்தத் திரைப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. நம்மைப் பற்றிய, உங்களைப் பற்றிய, இந்த உலகின் ஒவ்வொரு மனிதரைப் பற்றிய தரவுகள்தான் (Data) இன்றைய உலகின் மிகப்பெரிய சொத்து என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

பிரிட்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனமும், ஃபேஸ்புக் நிறுவனமும் இணைந்து நடத்திய மாபெரும் தரவுத் திருட்டை அம்பலப்படுத்தும் நோக்கில் 2019-ல் வெளியான இந்தத் திரைப்படம், கெய்சர் மற்றும் கரோல் ஆகியோரின் கதைகளை மையமாகக் கொண்டது. பிரெக்ஸிட் பிரச்சாரம், 2016 அமெரிக்கத் தேர்தல் என உலகையே அதிரவைத்த அரசியல் நிகழ்வுகளில் இந்த நிறுவனத்தின் பங்கு என்ன என்பதைத் துல்லியமாக ஆராய்கிறது.

தேர்தல்களில் அரசியல் கட்சிகளுக்கு உதவுவது போலத் தோன்றும் இந்த நிறுவனங்கள், உண்மையில் நம் தரவுகளைச் சேகரித்து, நம் சிந்தனைகளை ஆதிக்கம் செலுத்தி, நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளன. இது தனிமனித சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சுதந்திரமான தேர்தல்களை இனி நடத்துவது சாத்தியமில்லை என இயக்குநர்கள் எச்சரிக்கின்றனர்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version