எதிர்கால தமிழக வரலாறும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளது: ஆதவ் அர்ஜூனா

த.வெ.க தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தள பதில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஜனநாயக வழியில் நடைபெற்ற ‘மௌன புரட்சி’யை வரவேற்கும் விதமாகவும், நடைபெறவிருக்கும் மிகப்பெரிய அதிகார மாற்றத்திற்கு ஆதரவளிக்கும் வகையிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், என் அரசியல் ஆசானும், மாபெரும் தலைவருமான தொல்.திருமாவளவன் அவர்கள் ஆதரவு அளித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும், தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை பெற்று எங்களிடம் மகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் ஒப்படைத்துள்ளார். அதற்கு நாங்கள் மட்டுமல்ல… எதிர்கால தமிழக வரலாறும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளது.

மேலும், வெறும் நன்றி என்பதோடு மட்டுமல்ல… விசிக தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களின் 35 ஆண்டுகால அரசியல் பயணத்தின் அரசியல் லட்சியங்கள், சமூகநீதி கனவுகள், சமத்துவ கோட்பாடுகள், நடைபெறப்போகும் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் நிறைவேறும் என்பதையும் உறுதியாக தெரிவிக்கிறேன்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version