தவெக அரசு பவர் கட்டை மட்டுமே வழங்குகிறது – தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கோவிலுக்கு வருகை தந்தபோது அவருக்கு கோவில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசு குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், கூட்டம் அதிகமாக கூடும் கோவில்களுக்கு வருகை தந்து தரிசனத்திற்காக காத்துக் கிடக்கும் குழந்தைகளையும் பெரியவர்களையும் வைத்துக் கொண்டு தரிசனம் செய்ய 3 முதல் 4 மணி நேரம் ஆகும் சூழ்நிலையில், இயல்பாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழக மக்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாகி உள்ளார்கள். குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு, மின்வெட்டு, ஊழல் எதிர்ப்பு உள்ளிட்டவைகள் குறித்து மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த சூழ்நிலையில், தற்போதைய அரசு மக்களிடம் அதிக அளவு எதிர்ப்புகளுக்கு உள்ளாகிறது. மக்கள் எதை நினைத்து வாக்களித்தார்களோ, ஆனால் தற்பொழுது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளார்கள். மக்கள் தவெக அரசுக்கு பவர் கொடுத்தனர்..ஆனால் பவர் கட்டை மட்டுமே தற்போதைய அரசு மக்களுக்கு வழங்குகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக அடைந்த தோல்வியில் இருந்து மீண்டும் எழுந்து வருவோம். அதற்காக பல்வேறு மாவட்டங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் பல்வேறு ஆலோசனைகளை பெற்று அதற்கு உண்டான பணிகளை மேற்கொள்வோம் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். அரசு மருத்துவமனையில் விரைவில் மாற்றங்கள் வரும் என்றும், கோவைக்கு மெட்ரோ ரெயில் கொண்டு வருவது தவெகவின் தேர்தல் வாக்குறுதியில் உள்ளதாகவும் அமைச்சர் சம்பத்குமார் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version