தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

முதல்வர் விஜய் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என த.வெ.க. சார்பில் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 'தாய்மாமன் தங்க மோதிரம்' என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று மதுரையில் முறைப்படி தொடங்கி வைத்தார்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் முதன்முறையாக மதுரைக்கு வருகை தந்த நிலையில், அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திட்டத்தின் முதற்கட்டமாக, 1 லட்சத்து 28 ஆயிரம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள 107 அரசு மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மோதிரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மருத்துவமனையிலும் நாள்தோறும் 100 குழந்தைகளுக்கு வீதம் இந்த தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன. மதுரை மாவட்டத்தில் மட்டும் 6,400 குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்கள் வழங்கப்பட இருக்கின்றன. இருப்பினும், இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளை உள்ளடக்கிய செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களைத் தவிர்த்து, மாநிலத்தின் மற்ற அனைத்துப் பகுதிகளிலும் இத்திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

மதுரை மாவட்டத்தின் பிற அரசு மருத்துவமனைகளில் பிறந்த 25 குழந்தைகளுக்கு முதலமைச்சர் விஜய் தன் கரங்களால் மோதிரங்களை வழங்கினார். தொடர்ந்து, பிரசவ வார்டிற்கு நேரில் சென்று அங்கிருந்த 10 குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை அணிவித்து, கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களின் நலனை விசாரித்தார்.

மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும், மருத்துவமனை பணிகளுக்கு எந்தத் தடையும் ஏற்படாது என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். மருத்துவமனைக்குள் 80 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகவும், அதில் பயனாளிகள் 25 பேர் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் விஜய் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை மதுரையில் தொடங்கி வைத்தார். தமிழக அரசின் இந்த முக்கிய திட்டமான ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை’ முதல்வர் விஜய் இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முறைப்படி தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக அங்குப் பிறந்த 30 பச்சிளங்குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரங்களை அவர் நேரில் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, இத்திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டம் தாய்மார்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version