டாடா சியாரா ஜூபிலி எடிஷன்: ரூ.12 லட்சத்தில் புதிய கார் அறிமுகம்!

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டாடா சியாரா ஜூபிலி எடிஷன் கார்

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டாடா, தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. பட்ஜெட் விலையில் இருந்து சொகுசு கார்கள் வரை பலதரப்பட்ட வாகனங்களை டாடா நிறுவனம் இந்திய சாலைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், டாடா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான சியாரா காரின் புதிய அப்டேட்டாக 'டாடா சியாரா ஜூபிலி எடிஷன்' இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

டாடா சியாரா ஜூபிலி எடிஷன் மூன்று விதமான வேரியண்ட்களில் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது. இதன் 'Smart+ Jubilee Edition' மாடல் ரூபாய் 11.99 லட்சம் விலையிலும், 'Pure Jubilee Edition' மாடல் ரூபாய் 13.99 லட்சம் விலையிலும், 'Adventure Jubilee Edition' மாடல் ரூபாய் 16.19 லட்சம் விலையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய சியாரா ஜூபிலி எடிஷன் கார், டாடா நிறுவனத்தின் பிரத்யேக டீலர்களிடம் விற்பனைக்கு வந்துள்ளது. காரின் சிறப்பம்சங்களாக 10.25 இன்ச் தொடுதிரை வசதி, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு, ரியர் வியூ கேமரா, ரூஃப் ரெய்ல்ஸ், மற்றும் 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், டேஷ் கேமரா வசதியும் முதற்கட்டமாக 50,000 கார்களுக்கு வழங்கப்படுகிறது.

எஸ்யூவி ரக காரான இதில், ஃப்ரன்ட் கிரல் கிளாடிங், டெயில்கேட் கிளாடிங், வீல் ஆர்ச் கிளாடிங், ரூஃப் ரெய்ல்ஸ், மேக்னெடிக் சன்ஷேட்ஸ், பார்சல் ட்ரே, முன்பக்கம் மற்றும் பின்பக்கம் டேஷ் கேமரா போன்ற அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

டாடா சியாரா ஜூபிலி எடிஷன் காரில் மூன்று விதமான எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 160 பிஎச்பி சக்தியையும் 260 என்எம் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். இது 6 கியர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 106 பிஎச்பி சக்தியையும் 145 என்எம் டார்க் இழுவிசையையும் கொண்டுள்ளது. இது 6 கியர் மேனுவல் மற்றும் 7 கியர் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது.

அதேபோல், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 118 பிஎச்பி சக்தியையும் 260 என்எம் டார்க் இழுவிசையையும் வழங்கும். இந்த எஞ்சின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வருகிறது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த டாடா சியாரா ஜூபிலி எடிஷன் கார், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டாஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஹோண்டா எலிவேட் மற்றும் ரெனால்ட் டஸ்டர் போன்ற கார்களுக்குப் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சந்தையில் சிறப்பாக விற்பனையாகி வரும் சியாரா மின்சார காருக்கும் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், இந்த புதிய ஜூபிலி எடிஷன் காரும் சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version