தமிழகம் முழுவதும் 460 டாஸ்மாக் கடைகள் மூடல்: மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

தமிழகம் முழுவதும் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்

தமிழகம் முழுவதும் உள்ள 460 டாஸ்மாக் கடைகள் திடீரென மூடப்பட்டதால், மதுப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டாஸ்மாக் ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி நடத்திய போராட்டம் காரணமாக இந்த கடைகள் மூடப்பட்டன. இதனால், மதுபானங்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

டாஸ்மாக் நிர்வாகம், திரும்பப் பெறப்படும் காலி மதுபாட்டில்களுக்கு ரூ.10 திரும்ப வழங்கும் நடைமுறையை நேற்று முதல் அமல்படுத்துமாறு ஊழியர்களுக்கு அறிவித்திருந்தது. இந்த உத்தரவை ஏற்க மறுத்த ஊழியர்கள், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வழக்கம்போல் மதியம் 12 மணிக்கு திறக்கப்பட வேண்டிய டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், வழக்கத்தை விட அதிக மது விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஊழியர்களின் போராட்டத்தால் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், மது கிடைக்காமல் மதுப்பிரியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால், மதுபிரியர்கள் திக்குமுக்காடினர்.

ஊழியர்களின் இந்த திடீர் போராட்டத்தால், டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த போராட்டம் தொடர்பாக முதற்கட்டமாக 3 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற ஊழியர்கள் மீதும் பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊழியர்களின் இந்த திடீர் கடையடைப்பு போராட்டத்தால், டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சுமார் ரூ.150 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த திடீர் நடவடிக்கை மதுப்பிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் வருங்கால வைப்பு நிதி (பிஎப்) உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், புதிய நடைமுறையை ஏற்க ஊழியர்கள் மறுப்பு தெரிவித்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version