புது டெல்லியில் நேற்று நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு பாஜகவின் மையக் குழு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல். முருகன், முன்னாள் அமைச்சர், மாநில நிர்வாகிகள் மற்றும் முக்கியக் கட்சி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோரின் வழிகாட்டுதலும் கூட்டத்திற்கு வலு சேர்த்தது.
இது குறித்து மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 'தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கான மையக் குழு ஆலோசனைக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் நேற்று புது டெல்லியில் நடைபெற்றது. இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜகவின் அனைத்து முக்கிய நிர்வாகிகளும் இணைந்து பங்கேற்றோம்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தின் மூலம், வரவிருக்கும் தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில் தமிழக பாஜகவின் வியூகங்கள் வகுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தேசியத் தலைவர்களின் வழிகாட்டுதலுடன் மாநில நிர்வாகிகள் ஆலோசனைகளை மேற்கொண்டது, கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக அமைந்துள்ளது.

