தமிழகத்தில் 4 தொகுதிகள் காலியான நிலையில் இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில்

தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகள் குறித்த அறிக்கையை மாநில தேர்தல் அதிகாரி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளார். சட்டப்பேரவை செயலகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருச்சி கிழக்கு தொகுதி காலியாக இருந்த நிலையில், மேலும் 4 தொகுதிகள் காலியாகியுள்ளன.

தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ கயல்விழி செல்வராஜ், மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார் மற்றும் அம்பை தொகுதி எம்.எல்.ஏ இசக்கிசுப்பையா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதன் காரணமாக இந்த தொகுதிகளும் காலியாகின.

சட்டப்பேரவை உறுப்பினர் பதவி காலியானால், 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. எனவே, திருச்சி கிழக்கையும் சேர்த்து, இந்த 5 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜினாமா செய்த 4 எம்.எல்.ஏக்களும் தவெகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இடைத்தேர்தல் முடிவுகள் அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version