வேலை வாங்கித்தருவதாக பணம் வாங்கவில்லை – சிவசங்கர்

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக ஓய்வு பெற்ற SSI அதிகாரி சீனிவாசன் அளித்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் சிவசங்கரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சிவசங்கர், 'வேலை வாங்கித் தருவதாக நான் எந்த பணமும் வாங்கவில்லை. விசாரணைக்கு அழைத்ததால் மட்டுமே இங்கு வந்தேன். பல துறைகளில் மோசடி செய்த இளஞ்செழியனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என் பெயரை அவர் தவறாக பயன்படுத்தியுள்ளார். நான் போனில் பேசியதாக கூறுவது முற்றிலும் பொய். எனது குரல் பரிசோதனைக்கும் நான் தயாராக இருக்கிறேன். தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஆஜராவேன்' என்று தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக ஓய்வு பெற்ற SSI அதிகாரி சீனிவாசன் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், சிவசங்கரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த விசாரணையில், வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சிவசங்கர், தான் எந்த பணமும் வாங்கவில்லை என்றும், இளஞ்செழியன் என்பவர் தன்னை தவறாக பயன்படுத்தி விட்டதாகவும் கூறினார்.

மேலும், தான் போனில் பேசியதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்த சிவசங்கர், குரல் பரிசோதனைக்கும் தயார் என்றும், தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version