சிக்மா டப்பிங் நிறைவு: சந்தீப் கிஷன் புகைப்படம் வைரல்

முதல்-அமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' திரைப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளன. நடிகர் சந்தீப் கிஷன் தனது டப்பிங் பணிகளை முடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா இணைந்து தயாரித்துள்ள இந்த ஆக்ஷன் திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

'சிக்மா' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலில் ஜேசன் சஞ்சய் மற்றும் நடிகை கேத்தரின் தெரசா இணைந்து நடனமாடியிருந்தனர். தற்போது படத்தின் வெளியீட்டிற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படம் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. வரும் 31-ஆம் தேதி திரையரங்குகளில் 'சிக்மா' வெளியாகவுள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version