தேர்தலில் போட்டியிட மாட்டேன் – சித்தராமையா அறிவிப்பு

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இவர், 2023 ஆம் ஆண்டு முதல் கர்நாடக முதல்வராக பதவி வகித்து வந்தார். அவருக்கும், சிவக்குமாருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா விலகினார்.

இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சித்தராமையா, இன்றைய அரசியல் களம் ஊழல்மயமாகிவிட்டதாகக் குறிப்பிட்டார். வரும் 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும், ஆனால் அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்றும், மக்களின் குரலாக ஒலிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

வருணா தொகுதி மக்கள் தன்னை மீண்டும் தேர்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்தியதாகவும், ஆனால் இனிமேல் தேர்தலில் போட்டியிடக் கூடாது என முடிவு செய்துவிட்டதாகவும் சித்தராமையா கூறினார். கடந்த காலங்களில் தான் போட்டியிட்டபோது, இத்தொகுதி மக்கள் தனக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து, வெற்றியையும் உறுதி செய்ததாக அவர் நினைவு கூர்ந்தார்.

தற்போது அது போன்ற சூழ்நிலை இல்லை என்றும், தனக்கு 79 வயதாகிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். தனது தற்போதைய அரசுக்கு இன்னும் 1.5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில், அது முடியும் போது தனது வயது 81-82 ஆக இருக்கும் என்றும், அப்போது முன்பு போல் உற்சாகமாக பணியாற்றக்கூடிய வாய்ப்பு இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

வரும் தேர்தலில் தான் போட்டியிட்டால், மக்களுக்குப் பணம் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும், இன்றைய அரசியல் ஊழல் மயமாகிவிட்டதால், நேர்மையான அரசியல் வாயிலாக நிலைத்து நிற்க முடியாது என்றும் அவர் கூறினார். இதன் காரணமாகவே, வரும் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளதாக சித்தராமையா விளக்கினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version