சிவாலயங்களில் ஆறு கால பூஜைகள்: விரிவான விளக்கம்

சிவாலயங்களில் நடைபெறும் ஆறு கால பூஜைகள் குறித்த விளக்கம்

சைவ சமயக் கோவில்களில் ஆகம முறைப்படி தினந்தோறும் நடைபெறும் ஆறு கால பூஜைகள் குறித்த விரிவான தகவல்களை இங்கு காண்போம்.

முதலாவது பூஜை, அதிகாலை 4.30 முதல் 6 மணி வரை நடைபெறும் உஷத்கால பூஜை ஆகும். இந்தப் பூஜையின் போது, சிவாச்சாரியார் பைரவர் சந்நதியில் உள்ள சாவியை எடுத்து, மங்கள வாத்தியங்களுடன் பள்ளியறைக்குச் சென்று திருப்பள்ளி எழுச்சி ஓதுவார். பின்னர், உற்சவர் சிலையை கோவிலை வலம் வரச் செய்து, மூலவரான லிங்கத்தின் முன்பு வைத்து பூஜை நடைபெறும். இந்த பூஜையானது அபிஷேக ஆராதனையுடன் நிறைவடைகிறது.

அடுத்ததாக, காலை 8:00 மணி முதல் 9:00 மணிக்குள் பெரும்பாலான கோவில்களில் நடைபெறும் காலசந்தி பூஜை. சூரிய உதயத்திலிருந்து ஏழரை நாழிகைக்குள் இது நிகழ வேண்டும். இந்த பூஜையின் போது சூரியன், விநாயகர், துவாரபாலகர்களுக்கு பூஜை செய்யப்பட்டு, மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அர்ச்சனை நடைபெற்று, பஞ்சக்ருத்யம் கூறி நித்ய பலியுடன் பூஜை நிறைவடைகிறது.

நண்பகலில், சூரியன் உச்சத்தில் இருக்கும்போது (மதியம் 11.30 முதல் 12.30 வரை) உச்சிக்கால பூஜை நடத்தப்படுகிறது. விநாயகர் பூஜை, துவாரபாலகர் பூஜை முடிந்தபின், மூலவர் லிங்கத்திற்கு அலங்காரம், தூபம், தீபம், நைவேத்தியம் போன்றவை நடைபெறும். பின்னர், பூஜைப் பொருட்கள் மூலவரிடமிருந்து அகற்றப்பட்டு சண்டிகேஸ்வரரிடம் வைத்து வழிபடப்படும்.

மாலை 4.30 முதல் 6 மணிக்குள், சூரியன் மறைவதற்கு முன்னர் சாயரட்சை பூஜை நடத்தப்படுகிறது. இதில் விநாயகர் பூசை, மூலவரான லிங்கத்திற்கு அபிசேகம், அலங்காரம் செய்து தீபம், நைவேத்தியம் படைக்கப்படுகிறது.

சாயரட்சை பூஜைக்குப் பின்னர், சுமார் 1.30 மணி நேரம் கழித்து இரவின் துவக்கத்தில் ராக்கால பூஜை (சாயரட்சை இரண்டாம் கால பூஜை) நிகழ்த்தப்படுகிறது. விநாயகர் பூசை, மூலவருக்கு அபிஷேக, ஆராதனை, தீபம், நைவேத்தியப் படையல் பூஜை செய்யப்படுகிறது. பின்பு பரிவார தெய்வங்கள், நித்யாக்னி கார்யம், நித்யோத்சவ பலி ஆகிய பூஜைகள் சண்டிகேஸ்வர பூசையுடன் நிறைவடைகிறது.

இறுதியாக, இரவு 7.30 முதல் 9 மணி வரை அர்த்தசாம பூஜை நடைபெறும். மூலவருக்கு அபிஷேகம், ஆராதனை முடிந்ததும், உற்சவ மூர்த்திகளை பள்ளியறைக்கு எடுத்துச் சென்று அங்கு நறுமண மலர்கள், ஏலக்காய், இலவங்கம், வெற்றிலைப் பாக்கு வைத்து திரையிடப்படுகிறது. இது பள்ளியறை பூஜை என்றும் அழைக்கப்படுகிறது. பள்ளியறை பூஜை முடிந்ததும் சண்டிகேஸ்வரருக்கு பூஜை நடைபெற்று, பைரவர் சந்நிதியில் சாவியை வைத்து பூஜை நடைபெறுவதோடு அர்த்தசாம பூஜை முடிவடைகிறது.

ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்ட கோவில்களில், இந்த விதிகளின்படியே பூஜைகள் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு வேளை பூஜை நடக்கும் போதும் கர்ப்ப கிரஹத்தில் விக்ரகத்தின் பழைய அலங்காரங்களை எடுத்துவிட்டு, அபிஷேகம் செய்து வேறு வஸ்திரம் அணிவித்து பிறகு நைவேத்தியம் செய்வார்கள். பிறகு தீபாராதனை நடைபெறும். பெரிய ஆலயங்களில் தீபாராதனையில் ஷோடசோபசாரங்கள் நடைபெறும். இவை நடக்கும்போது பல வகை வாத்தியங்கள் முழங்கும்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version