செம்மஞ்சேரி விளையாட்டு நகர திட்டப் பணி ஆணை ரத்து: தமிழக அரசு அதிரடி

செம்மஞ்சேரி விளையாட்டு நகர திட்டப் பணி ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் உலகத் தரம் வாய்ந்த மெகா ஸ்போர்ட் சிட்டி விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்திற்கு திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பணி ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023 ஆம் ஆண்டு சட்டசபையில், சென்னையில் உலகத் தரம் வாய்ந்த மெகா ஸ்போர்ட் சிட்டி விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, விளையாட்டு நகரம் அமைப்பதற்கு ஏற்ற இடங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. செம்மஞ்சேரி, வண்டலூர், குண்டம்பாக்கம் ஆகிய மூன்று இடங்கள் சாத்தியமானவையாகக் கண்டறியப்பட்டன.

இறுதியில், செம்மஞ்சேரி பகுதி தேர்வு செய்யப்பட்டு, அங்கு விளையாட்டு நகரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த விளையாட்டு நகரத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தவும், சர்வதேசப் போட்டிகள் நடக்கும்போது வெளிநாட்டு வீரர்கள் எளிதாக வந்து செல்லவும், சென்னை விமான நிலையத்திற்கு அருகாமையில் இந்த விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என அரசு திட்டமிட்டிருந்தது.

இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், ஆர்பிபி என்ற நிறுவனத்திற்கு விளையாட்டு நகரத்தை அமைப்பதற்கான பணி ஆணை வழங்கப்பட்டது. இந்தத் திட்டம் 112 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.206 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போதுள்ள தமிழக அரசு, செம்மஞ்சேரியில் சர்வதேசத் தரத்தில் மெகா விளையாட்டு நகரம் அமைப்பதற்காக திமுக ஆட்சியில் வழங்கப்பட்டிருந்த பணி ஆணையை ரத்து செய்துள்ளது. இதற்கான கடிதத்தை அரசு, ஆர்பிபி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளது.

இந்த திடீர் பணி ஆணை ரத்து நடவடிக்கை, விளையாட்டுத் துறை வட்டாரத்திலும் அரசியல் களத்திலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திட்டமிடப்பட்டிருந்த இந்த விளையாட்டு நகரம், வீரர்களின் பயிற்சிக்கும் சர்வதேசப் போட்டிகளுக்கும் ஒரு முக்கிய மையமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பணி ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version