பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் ரோகித் சர்மா, சுப்மன் கில் பெயர்.. என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?

டாக்கா: கிரிக்கெட் ஒளிபரப்பு வரலாற்றில் பல தவறுகள் இருந்தாலும், பாகிஸ்தான் – வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டியில் நிகழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டாக்காவில் நடந்த இப்போட்டியில், பாகிஸ்தான் பிளேயிங் லெவனுக்குப் பதிலாக இந்திய அணியினரின் ஸ்கோர்கார்டு ஒளிபரப்பாளர்களால் தவறுதலாகக் காண்பிக்கப்பட்டது.

ஷேர்-இ-பங்ளா தேசிய கிரிக்கெட் மைதானத்தில் டாஸ் வென்று பந்துவீச பாகிஸ்தான் முடிவு செய்தபோது இப்பிழை நிகழ்ந்தது. திரையில் ரோகித் சர்மா, ஷுப்மன் கில், திலக் வர்மா, ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா, ரிங்கு சிங், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் போன்ற இந்திய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

நேரடி ஒளிபரப்பில், சரியான போட்டியின் கிராபிக்ஸுக்குப் பதிலாக இந்திய அணி தொடர்பான காட்சிகள் காட்டப்பட்டன. இத்தவறு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்கப்பட்டாலும், ரசிகர்கள் எடுத்த ஸ்கிரீன்ஷாட்டுகள் உடனடியாக வைரலாகி மீம் பண்டிகையாக மாறின. இது குறித்து ஒளிபரப்பாளர்கள் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதையும் தரவில்லை.

இதை அடுத்து, பலரும் பாகிஸ்தான் அணிக்காக எப்போது ரோகித் சர்மா, கில் விளையாடினார்கள். தவறு செய்தாலும் இதற்கு ஒரு நியாயம் வேண்டாமா என்று கேட்டு வருகின்றனர். திமுகவும்.அதிமுகவும் கூட்டணி வைக்கப் போகிறது என்ற வதந்தி தான் கிளம்பியது. இங்கு இரண்டு நாடுகளும் ஒருங்கிணைந்து விளையாடுகிறதா என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், முதலில் பந்துவீசிய பாகிஸ்தான், வங்கதேசத்தை 413 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியது. நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 129 பந்துகளில் 12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் தனது 9வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்து அசத்தினார். மொமினுல் ஹக் 91 ரன்கள் குவித்தார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version