மூத்த குடிமக்களுக்கு 8.25% வட்டி: ரெப்கோ வங்கியின் அசத்தல் சலுகை!

தாயகம் திரும்பியோரின் மறுவாழ்விற்காக இந்திய அரசின் மத்திய உள்துறை அமைச்சகத்தால் நிறுவப்பட்ட ரெப்கோ வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு, தமிழகம் மற்றும் தென்னிந்தியா முழுவதும் 108 கிளைகளுடன் 57 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இவ்வங்கி, கும்பகோணம் கிளையில் ஒரு புதிய சிறப்பு சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய தூதரகத்தின் ஓய்வுபெற்ற அரசு தூதர் திரு. சந்திரமௌலி அவர்கள் குத்துவிளக்கேற்றி இந்த சிறப்பு சேமிப்பு திட்டத்தை துவக்கி வைத்தார். கும்பகோணம் சாரங்கபாணி கீழ் வீதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த ரெப்கோ வங்கி கிளையில், மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 8.25% வட்டியும், மற்றவர்களுக்கு 7.75% வட்டியும் இந்த சிறப்பு சேமிப்பு திட்டத்தின் மூலம் வழங்கப்படும். இந்த முகாம் 10/06/2026 முதல் 31/07/2026 வரை மட்டுமே செயல்படும்.

மேலும், வங்கியின் உதவி பொது மேலாளர் திரு. விக்னேஷ் அவர்கள் தெரிவித்த தகவலின்படி, அனைத்து வகையான தேவைகளுக்கும் சொத்தின் மீது அடமானக் கடன் மற்றும் நகைக் கடனுக்கு கிராமுக்கு அதிகபட்சமாக ₹10,800/- வரை துரிதமாகவும் குறைந்த வட்டிலும் வழங்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

தொடக்க விழாவில் பொதுமக்கள், வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர். வங்கியின் உதவி பொதுமேலாளர் திரு. விக்னேஷ் பேசுகையில், 'இந்தச் சிறப்பு சேமிப்பு திட்டம் மூலம் மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 8.25 சதவீத வட்டியும், மற்றவர்களுக்கு 7.75 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது. ஜூன் 10 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு சிறுசேமிப்பு திட்ட முகாமை வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என வலியுறுத்தினார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version