வீட்டிலேயே கருவளையத்தை போக்கும் எளிய வழிகள்!

கண்களுக்கு கீழே உள்ள கருவளையத்தை போக்க எளிய வீட்டு வைத்தியங்கள்

முக அழகை கெடுக்கும் கண்களுக்கு கீழே உள்ள கருவளையத்தை போக்க பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இருப்பினும், எளிமையான வீட்டு வைத்தியங்கள் மூலம் கருவளையங்களில் இருந்து விடுபட முடியும்.

தூக்கமின்மை மற்றும் மொபைல் போன்களை அதிகமாக பயன்படுத்துவது கண்களுக்கு கீழே கருவளையம் ஏற்பட முக்கிய காரணங்களாக அமைகின்றன. இந்த கருவளையங்களை மறைப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஆனால், சில எளிய முறைகளை பின்பற்றுவதன் மூலம் இவற்றை படிப்படியாக குறைக்கலாம்.

முதலில், ஒரு உருளைக்கிழங்கை எடுத்து அதை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், அந்த உருளைக்கிழங்கு சாற்றை பஞ்சு கொண்டு கண்களுக்கு கீழே கருவளையம் உள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வர வேண்டும். உருளைக்கிழங்கில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கருவளையங்களை குறைக்க பெரிதும் உதவும்.

மேலும், கிரீன் டீ பைகளை பயன்படுத்துவதும் கருவளையத்தை குறைக்க ஒரு சிறந்த வழியாகும். கிரீன் டீ பைகள் இரத்த நாளங்களை சுருங்கச் செய்து, கருவளையங்களையும் குறைக்க உதவுகின்றன. பயன்படுத்திய கிரீன் டீ பேக்குகளை குளிர்வித்து, கண்களின் மீது வைத்து சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம்.

குளிர்ந்த பாலை ஒரு காட்டன் துணியில் நனைத்து, கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்களில் தடவி, சுமார் பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் கருவளையம் குறையும். இந்த முறை கண்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு, கருவளையங்களையும் குறைக்கும்.

இப்படி நம் வீட்டிலேயே எளிமையான முறையில் கருவளையங்களை நீக்குவது மட்டுமின்றி, சருமத்தையும் பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும். இந்த இயற்கை வைத்தியங்கள் பக்க விளைவுகள் அற்றவை என்பது கூடுதல் சிறப்பு.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version