தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம்: ரூ.200 கோடி மோசடி – 177 புகார்கள்

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்தவர்கள் கைது

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி, லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக இதுவரை 177 புகார்கள் வந்துள்ளன. இந்த முறைகேடுகள் அனைத்தும் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சுமார் ரூ.100 கோடி வரை மோசடி நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் தொடர்ச்சியாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திமுக நிர்வாகியும் தனியார் பள்ளி சங்கத் தலைவருமான பி.டி. அரசகுமார் மற்றும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் முத்துக்குமார் ஆகியோரைக் கைது செய்தனர்.

மேலும், தனியார் பள்ளிகளுக்கு பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பி.டி. அரசகுமார் சுமார் ரூ.200 கோடி வரை பணம் மோசடி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பணம் கொடுத்து ஏமாந்த பள்ளி நிர்வாகிகளிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக இதுவரை 177 புகார்கள் வந்துள்ளன. தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் அரசகுமார் உள்ளிட்டோர் மீதான வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூபாய் 100 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக உள்ள திமுக பிரமுகர் முத்துக்குமாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முத்துக்குமாரைக் கைது செய்வதற்காக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்த லுக் அவுட் நோட்டீஸை அனுப்பியுள்ளனர்.

இந்த மோசடி தொடர்பாக பி. டி. அரசகுமார், ஆரோக்கியராஜ், மற்றும் சுரேஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தனியார் பள்ளிகளின் அங்கீகார நடைமுறைகளில் நடைபெறும் இதுபோன்ற முறைகேடுகள், கல்வித்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகிகளுக்கு நீதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version