தனியார் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு: கல்விக் கட்டண விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும்

தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டண விவரங்களை கட்டாயம் விளம்பரப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளது. இது பெற்றோர்களுக்கு கல்விக் கட்டணம் குறித்த தெளிவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோடை விடுமுறை முடிந்து, வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலும், 4 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால், நிர்வாக வசதி மற்றும் பெற்றோர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே தேதியில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இதையடுத்து, பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னதாக, குடிநீர் வசதி, தூய்மைப் பணிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் போன்றவற்றை தமிழக அரசு தீவிரமாக ஆய்வு செய்தது. அனைத்து ஆய்வுகளுக்குப் பிறகு, அரசு, அரசு உதவி பெறும், தனியார் மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் ஜூன் 4 ஆம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்திருந்தார்.

இந்தச் சூழலில், தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டண விவரங்களை விளம்பரப்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் தொடர்பாக நிலவும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version