ஆ.ராசாவுக்கு பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம்: தாயைப் பற்றி பேசியது தவறு என விமர்சனம்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.) தலைவர் தொல். திருமாவளவனை கடுமையாக விமர்சித்துள்ளார். அமைச்சர் பதவி கிடைத்ததால் திருமாவளவனின் நிலைப்பாடு மாறியுள்ளதாகவும், அதற்காகவே திமுக கூட்டணியில் இருந்து வி.சி.க. விலகியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, 'நீங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டு மற்றவர்களை குற்றம்சாட்டுவது மிக மிக தவறு' என்று கூறினார். இடதுசாரிகள் மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு தந்தபோதும், அமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறியதை அவர் சுட்டிக்காட்டினார். சகோதரர் வன்னி அரசுக்கு அமைச்சர் பதவி கிடைத்ததால், கூட்டணி மாறிவிட்டதாக பிரேமலதா தெரிவித்தார். 'குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை' என்று சொல்வது போல திருமாவளவனின் பேச்சு இருப்பதாக அவர் விமர்சித்தார். சட்டமன்ற தேர்தலில் வி.சி.க.வுக்கு திமுக இரண்டு தொகுதிகள் கூடுதலாக வழங்கியதையும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், திமுகவினரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த பிரேமலதா, 'ஆர்ப்பாட்டத்தில் ஆபாசமாக பேசிய திமுகவினர் மீது வழக்கு பதிந்தது சரியானது தான். நிர்மல் குமார் அம்மா என்ன பண்ணாங்க? எதுக்கு அவங்க அம்மாவ பத்தி பேசுனீங்க? அடுத்தவங்க முதுகை சொரியும் முன் உங்கள் முதுகை பாருங்கள்' என்று ஆவேசமாக பேசினார். 'பெற்ற தாய் குறித்து பொதுவெளியில் பேசும் உரிமை யாருக்கும் கிடையாது. பேசிய அவரையும் பெற்றெடுத்தது ஒரு தாய்தான். அதற்கு எனது கடுமையான கண்டனங்கள்' என்றும் அவர் தெரிவித்தார். மைக் கிடைத்துவிட்டது என்பதற்காக, வாய்க்கு வந்தபடி என்னென்னவோ பேசக் கூடாது என்றும், அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்தது சரியான முடிவு என்றும் பிரேமலதா கூறினார்.

'வார்த்தைகள் என்றைக்கும் மாறாது, வரலாறும் மாறாது. சிம்பிளா ஒரு வார்த்தை சொல்லிட்டு போய்டுவேன், யாரையும் காயப்படுத்தக்கூடாதுன்னு என்னோட வார்த்தைகளை பார்த்து பயன்படுத்துறேன்' என்று தனது பேச்சில் கவனமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். 'முதல்வர் லண்டன் பயணத்தில் நீங்க என்னலாம் பார்த்தீங்களோ… நானும் அதையெல்லாம் பார்த்தேன்' என்றும் அவர் தெரிவித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version