பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகுத் தொல்லைக்கு மிகச் சிறந்த தீர்வாக அமையும். இது தலைக்கு குளிர்ச்சியையும் அளிக்கும். மேலும், வெந்தயப் பொடியை தலையில் தேய்த்துக் குளிப்பதன் மூலம் பொடுகுத் தொல்லை நீங்குவதோடு, உடல் உஷ்ணமும் குறையும்.
அருகம்புல் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்கு காய்ச்சி, ஆறிய பிறகு தினசரி தலையில் தடவி வந்தால் பொடுகு மறைந்துவிடும். வேப்பிலை மற்றும் துளசி சாறுகளைக் கலந்து தலையில் தேய்த்தாலும் நல்ல பலன் கிடைக்கும். வசம்புப் பொடியை தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தலையில் தடவி வரலாம்.
தலைக்கு குளித்த பிறகு, தலையை துவட்டாமல், சிறிதளவு வினிகரை தண்ணீரில் கலந்து தலையில் ஊற்றி, பின்னர் துவட்டிக் கொள்ளலாம். இதுவும் பொடுகுத் தொல்லைக்கு ஒரு தீர்வாகும்.
மருதாணி இலைகளை அரைத்து, அதனுடன் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் தடவி வரலாம். வேப்பிலையையும் மிளகாயையும் சேர்த்து நன்கு அரைத்து, தலையில் ஒரு மணி நேரம் ஊறவைத்து குளிப்பதன் மூலம் பொடுகுத் தொல்லைக்கு நிவாரணம் பெறலாம்.
மண்டை கரப்பான் நோய் குணமாக, பப்பாளிப் பாலை படிகாரத்துடன் சேர்த்து தடவலாம். இது மண்டை கரப்பான் நோயிலிருந்து விடுதலை அளிக்கும்.
மேலும், சாம்பார் வெங்காயத்தை (சின்ன வெங்காயம்) அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளிக்கலாம். பாலுடன் மிளகுப் பொடியைச் சேர்த்துக் கலக்கி தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளிப்பதும் நல்லது. தயிரை தலையில் தேய்த்துக் குளிப்பதும் ஒரு சிறந்த முறையாகும். வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது தலைக்கு ஆரோக்கியம் தரும்.

