டிக்டாக் வீடியோ எடுக்கும்போது புலி தாக்கி இளைஞர் பலி: பாகிஸ்தானில் அதிர்ச்சி

பாகிஸ்தானில் டிக்டாக் வீடியோ எடுக்கும்போது புலி தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம்.

பாகிஸ்தானின் லாகூர் அருகே, டிக்டாக் வீடியோ எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி தாக்கி 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரச் சம்பவம் கஹ்னா பகுதியில் உள்ள ஒரு தனியார் வனவிலங்கு இனப்பெருக்கப் பண்ணையில் புதன்கிழமை அன்று நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்த இளைஞர், பண்ணை ஊழியரான தல்ஹா என அடையாளம் காணப்பட்டுள்ளார். சமூக வலைதள பிரபலமும், டிக்டாக் பிரபலம் என அறியப்படுபவருமான நௌமன் ஹசன் என்பவர், வீடியோ பதிவு செய்வதற்காகப் புலியைக் கூண்டிலிருந்து வெளியே விடுமாறு கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், கட்டுப்பாட்டை இழந்த பெண் புலி, திடீரென தல்ஹாவைத் தாக்கி கடுமையாகக் காயப்படுத்தியுள்ளது.

தாக்குதலில் பலத்த காயமடைந்த தல்ஹாவை, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நடந்தபோது, தல்ஹாவின் தந்தையும், சகோதரர் ஹாஷிமும் அதே பண்ணையில் பணிபுரிந்து கொண்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தந்தையின் கண் முன்னே மகன் புலியால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில், நாய் கடித்ததாலேயே இளைஞருக்குக் காயம் ஏற்பட்டதாகக் கூறி, உண்மையை மறைக்க முயற்சி நடந்ததாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், தீவிர விசாரணையின் முடிவில், புலி தாக்கியதே மரணத்திற்குக் காரணம் என உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, பண்ணையின் உரிமையாளர் ஃபயாஸ் மற்றும் டிக்டாக் பிரபலம் நௌமன் ஹசன் ஆகிய இருவரையும் கஹ்னா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பொழுதுபோக்கு அல்லது டிக்டாக் மோகத்திற்காக மனித உயிருக்கு ஆபத்து விளைவிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என லாகூர் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கடுமையாக எச்சரித்துள்ளது. மேலும், அலட்சியம் மற்றும் உண்மையை மறைக்க முயன்ற அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் காவல்துறை உறுதிபடத் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்திய பெண் புலி தற்போது வனவிலங்குத் துறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த தனியார் பண்ணையில் புலியை வளர்ப்பதற்கான முறையான உரிமங்கள் பெறப்பட்டிருந்தனவா, மற்றும் விலங்குகளின் பாதுகாப்புக்காகப் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சட்டரீதியான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version