பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்து: 21 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. முசாபராபாத் அருகே பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான Mi-17 ஹெலிகாப்டர் ஒன்று, டேக்-ஆஃப் செய்யும் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 21 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் அப்பகுதியில் நடைபெற்ற போராட்ட வன்முறை சம்பவங்களுடன் இந்த விபத்துக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், இது ஒரு தொழில்நுட்பக் கோளாறு மட்டுமே என்றும் பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வதந்திகளை ராணுவம் மறுத்துள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version