ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்: போக்குவரத்து துறை அதிரடி நடவடிக்கை

போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆம்னி பேருந்துகளில் விதிமீறல்களை ஆய்வு செய்தனர்.

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதன் விளைவாக, விதிமீறல்களில் ஈடுபட்ட 1169 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பண்டிகைக் காலங்களில் சென்னையிலிருந்து சுமார் 3000 ஆம்னி பேருந்துகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளில் வழக்கத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்தன. இந்தப் புகார்களின் அடிப்படையில், கடந்த ஐந்து நாட்களாக தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆம்னி பேருந்துகளில் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சிறப்பு தணிக்கையின் போது, விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 1169 ஆம்னி பேருந்துகளுக்கு அபராத அறிக்கை மற்றும் இ-சலான் வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விதிமீறல்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட இணக்க கட்டணம் (Compounding fee) ரூ.24,44,100/- ஆகும். இதில், வாகன உரிமையாளர்களிடமிருந்து உடனடியாக ரூ.5,40,000/- அபராதமாக வசூலிக்கப்பட்டது.

மேலும், பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாட்டில் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளிடமிருந்து, தமிழ்நாட்டிற்கு செலுத்த வேண்டிய சாலை வரியாக ரூ.53,62,074/- வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கடந்த ஐந்து நாட்களில் மட்டும் ஆம்னி பேருந்துகள் தொடர்பான வரி மற்றும் இணக்க கட்டணமாக மொத்தம் ரூ.59,02,074/- வசூலிக்கப்பட்டுள்ளது.

தணிக்கையின் போது, அதிக கட்டணம் வசூலித்ததாக கண்டறியப்பட்ட 11 ஆம்னி பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாமல் (Fitness Certificate) மற்றும் உரிய சாலை வரி செலுத்தப்படாமல் இயக்கப்பட்ட 6 பேருந்துகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன.

ஆம்னி பேருந்துகளில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை வாகன உரிமையாளர் ரத்து செய்தால், பயணிகளுக்கு மாற்றுப்பேருந்தில் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்தின் அனுமதிச்சான்று ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும் இந்த சிறப்பு வாகனத் தணிக்கை தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும். இதற்காக, தமிழ்நாட்டில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய சுமார் 40 சிறப்பு தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கூடுதல் தகவல்களுக்கு அல்லது புகார் தெரிவிக்க, பொதுமக்கள் 9384808333 என்ற கைப்பேசி எண்ணிலோ அல்லது tc.tn@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version