இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார ஸ்கூட்டர்கள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. இந்த சூழலில், Odysse நிறுவனம் தனது E2Go மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, வயதானவர்கள் மற்றும் வீட்டின் அருகே மட்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Odysse E2Go மின்சார ஸ்கூட்டர் ஒரே ஒரு வேரியண்டில் ரூபாய் 75 ஆயிரத்து 749 என்ற பட்ஜெட் விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 70 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிலோமீட்டர் ஆகும். இதனால், வீட்டில் உள்ள முதியவர்கள் ஓட்டுவதற்கும், வீட்டின் அருகே உள்ள இடங்களுக்குச் செல்வதற்கும் இது மிகவும் வசதியான தேர்வாக அமையும்.
இந்த ஸ்கூட்டரின் எடை 90 கிலோ ஆகும். இதில் 1.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 4 மணி நேரம் ஆகும். மேலும், இதில் பிஎல்டிசி மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, Odysse E2Go ஸ்கூட்டரில் போர்ட்டபிள் லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது ஐபி 67 ரேட்டிங் பெற்றுள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் வசதி, போர்ட்டபிள் சார்ஜர் வசதி, ஸ்டாண்டர்ட் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை இதில் அடங்கும். முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் ட்ரம் பிரேக் வசதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஸ்கூட்டரில் 10 இன்ச் அளவுள்ள அலாய் சக்கரங்கள் முன்புறமும் பின்புறமும் பொருத்தப்பட்டுள்ளன. ட்யூப்லெஸ் டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சஸ்பென்ஷன் அமைப்பைப் பொறுத்தவரை, முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் ஹெவி ஸ்ப்ரிங் லோடட் சஸ்பென்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 250 மி.மீட்டர் ஆகும். இது 150 கிலோ எடை வரை தாங்கும் திறன் கொண்டது. பேட்டரிக்கு 3 வருடங்கள் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் வரை வாரண்டியும், மோட்டாருக்கு ஒரு வருட வாரண்டியும் அளிக்கப்படுகிறது. டிஜிட்டல் டிஸ்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் ஆகியவை டிஜிட்டல் முறையில் அமைக்கப்பட்டுள்ளன.
கூடுதலாக, ஸ்டாண்ட் அலாரம், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் போன்ற வசதிகளும் உள்ளன. யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், கீலெஸ் லாக்/அன்லாக், ஆன்டி தெஃப்ட் சிஸ்டம், செல்ஃப் ஸ்டார்ட், ரிவர்ஸ் மோட் போன்ற நவீன வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. எல்இடி முகப்பு விளக்குகள், பிரேக்/டெயில் விளக்குகள், சிக்னல் விளக்குகள் என அனைத்தும் எல்இடியில் பொருத்தப்பட்டுள்ளன. டிக்கி வசதியும் உண்டு.
Odysse E2Go மின்சார ஸ்கூட்டர் கருப்பு, சாம்பல், நீலம், சிவப்பு உள்ளிட்ட ஆறு விதமான வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் பட்ஜெட் விலை காரணமாக, இது சீனியர்களுக்கும், நகர்ப்புற பயன்பாட்டிற்கும் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

