டிம் டேவிட்டுக்கு ஆபாச சைகைக்காக அபராதம் விதிப்பு

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 54-வது லீக் போட்டி ராய்ப்பூரில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. பின்னர் 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்.சி.பி. அணி, கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இறுதிவரை பரபரப்புடன் நடந்த இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதால், ரசிகர்களுடன் சேர்ந்து ஆர்.சி.பி. வீரர்களும் ஆக்ரோஷமாக வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூரு அணியின் வீரர் டிம் டேவிட் ஆபாச சைகை காட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

இதன் காரணமாக, ஆபாச சைகை காட்டி கொண்டாடிய டிம் டேவிட்டுக்கு, அவரது போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நடத்தை விதிகளை மீறி ஆபாச சைகை பயன்படுத்தியதற்காக அவருக்கு 2 டீமெரிட் புள்ளிகளும் வழங்கப்பட்டன.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version