Oben Rorr EZ Sigma: ஒரே சார்ஜில் 175 கி.மீ மைலேஜ் தரும் இ-பைக்!

Oben Rorr EZ Sigma இ-பைக்

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறும் போக்கு அதிகரித்துள்ளது. ஸ்கூட்டர்களுக்கு இணையாக இ-பைக்குகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில், Oben நிறுவனத்தின் புதிய Oben Rorr EZ Sigma இ-பைக் குறித்த தகவல்கள் விரிவாகக் காண்போம்.

இந்த இ-பைக் இரண்டு வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் வேரியண்ட், 3.4 kWh பேட்டரியுடன் ரூபாய் 1 லட்சத்து 15 ஆயிரத்து 836 விலையிலும், இரண்டாவது வேரியண்ட் 4.4 kWh பேட்டரியுடன் ரூபாய் 1 லட்சத்து 26 ஆயிரத்து 048 விலையிலும் விற்பனைக்கு வருகிறது.

மைலேஜ் மற்றும் வேகம் குறித்த தகவல்களில், 3.4 kWh பேட்டரி கொண்ட முதல் வேரியண்ட் ஒருமுறை சார்ஜ் செய்தால் 140 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும். இது சார்ஜ் செய்ய 5 மணி நேரம் ஆகும். 4.4 kWh பேட்டரி கொண்ட இரண்டாவது வேரியண்ட் ஒருமுறை சார்ஜ் செய்தால் 175 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும். இந்த வேரியண்ட்டை சார்ஜ் செய்ய 7 மணி நேரம் ஆகும். இருப்பினும், இரண்டு வேரியண்ட்களிலும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இ-பைக் அதிகபட்சமாக மணிக்கு 95 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.

Oben Rorr EZ Sigma இ-பைக் கருப்பு – வெள்ளை, ஆரஞ்சு – கருப்பு, நீலம் – கருப்பு, கருப்பு – சிவப்பு ஆகிய வண்ணங்களில் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். இந்த பைக்கின் எடை 143 கிலோ ஆகும். இதன் இருக்கை உயரம் 810 மி.மீட்டர். யுஎஸ்பி சார்ஜிங் வசதி, 286 என்எம் டார்க் இழுதிறன், 40 கி.மீ வேகத்தை வெறும் 3.3 வினாடிகளில் எட்டும் திறன் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.

மேலும், இந்த இ-பைக் எகோ, சிட்டி மற்றும் ஹேவோக் என மூன்று ரைடிங் மோட்களில் வருகிறது. ஐபி 67 மோட்டார் ஐபி ரேட்டிங், எல்எஃப்பி பேட்டரி, யுபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், முன்பக்கம் மற்றும் பின்பக்கம் டிஸ்க் பிரேக் வசதி, அலாய் சக்கரங்கள் (முன்பக்கம் மற்றும் பின்பக்கம் 17 இன்ச்), ட்யூப்லெஸ் டயர்கள் போன்ற அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

சஸ்பென்ஷன் பொறுத்தவரை, முன்பக்கம் 37 மி.மீட்டர் டியா டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனும், பின்பக்கம் 7 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 200 மி.மீட்டர் ஆகும். பேட்டரிக்கு 3 வருடம் அல்லது 40 ஆயிரம் கிலோமீட்டர் வரையும், மோட்டாருக்கு 3 வருடமும் வாரண்டி அளிக்கப்படுகிறது.

வசதிகளைப் பொறுத்தவரை, 5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே, ப்ளூடூத் மற்றும் இன்டர்நெட் இணைப்பு, ஜிபிஎஸ் நேவிகேஷன், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், 2 ட்ரிப்மீட்டர்கள், லோ பேட்டரி இண்டிகேட்டர், கால்/எஸ்எம்எஸ் அலர்ட் வசதி, எல்இடி முகப்பு விளக்குகள், எல்இடி பிரேக்/டெயில் விளக்குகள் மற்றும் டிக்கி வசதி ஆகியவை இதில் அடங்கும்.

மிகவும் வசீகரமான தோற்றத்துடனும், ஸ்போர்ட்டி லுக்கிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இந்த Oben Rorr EZ Sigma இ-பைக்கை பலரும் விரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version