இந்தியாவில் இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வாகன உற்பத்தியாளர்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய மாடல்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றனர். வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், அதாவது அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்தியாவில் அறிமுகமாக உள்ள ஏழு முக்கிய இரு சக்கர வாகனங்கள் குறித்த விவரங்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
யமஹா நிறுவனம் தனது புதிய Yamaha R2 மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த பைக் 200 சிசி கிளாஸ் சிங்கிள் சிலிண்டர் எஞ்சினுடன் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை சுமார் ரூபாய் 2 லட்சம் முதல் ரூபாய் 2.5 லட்சம் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பஜாஜ் நிறுவனத்தின் பிரபலமான பல்சர் வரிசையில், 2026 Bajaj Pulsar என்ற அப்டேட் செய்யப்பட்ட மாடல் இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் அறிமுகமாகலாம். பழைய மாடல்களை விட மேம்பட்ட எஞ்சின் மற்றும் மைலேஜ் திறனுடன் இது வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல விலையுயர்ந்த இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான Norton Manx R, தனது புதிய பைக்கை இந்த மாதம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூபாய் 30 லட்சம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏதர் நிறுவனம் தனது புதிய மின்சார ஸ்கூட்டரான Ather Konarc-ஐ வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இந்த இ-ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 450 கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடிய திறன் கொண்டது. இது அறிமுகமானால், இந்திய மின்சார ஸ்கூட்டர் சந்தையில் ஏதர் நிறுவனத்தின் மதிப்பு மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் Royal Enfield Himalayan 440 அட்வெஞ்சர் பைக், வரும் செப்டம்பர் மாதம் அறிமுகமாகலாம். இதன் இந்திய விற்பனை விலை சுமார் 2.5 லட்சம் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. சிங்கிள் சிலிண்டர் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக், அதன் தோற்றம் மற்றும் ஆற்றல் காரணமாக நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
இந்தியாவில் வளர்ந்து வரும் மின்சார ஸ்கூட்டர் நிறுவனங்களில் ஒன்றான Simple எனர்ஜி, தனது Simple Arrive இ-ஸ்கூட்டரை வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இதன் விலை சுமார் ரூபாய் 1.3 லட்சம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இ-ஸ்கூட்டர் சந்தையில் உள்ள மற்ற மின்சார ஸ்கூட்டர்களுக்கு ஒரு வலுவான போட்டியாக அமையும் என கருதப்படுகிறது.
ட்ரூம்ப் நிறுவனம் தனது புதிய Triumph Bonneville 350 பைக்கை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த பைக்கில் 350 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் விற்பனை விலை ரூபாய் 2 லட்சம் முதல் ரூபாய் 2.5 லட்சம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரூம்ப் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

