மருந்து கடைகளில் புதிய கட்டுப்பாடுகள்: டாக்டர் சீட்டு அவசியம்!

மருத்துவரின் பரிந்துரைச் சீட்டுடன் மருந்துகளை வாங்கும் வாடிக்கையாளர்

மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் குறிப்பிட்ட மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது என்ற புதிய விதிமுறைகள் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளன. இது தொடர்பாக மருந்து கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

குறிப்பாக, அட்டவணை எச், எச்1, மற்றும் எக்ஸ் பிரிவுகளில் உள்ள மருந்துகள் முறையான மருத்துவர் சீட்டு இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. சில மருந்து கடைகளில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தூக்க மாத்திரைகள் மற்றும் வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த வகை மருந்துகள் போதைக்காகவும், தற்கொலை எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் பயன்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சகத்தின் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மருந்துகளின் விநியோகத்தைக் கடுமையாகக் கண்காணிக்கும் நோக்கில், கூடுதல் ஒழுங்குமுறை நடவடிக்கையாக அனைத்து மருந்து கடைகளிலும் சிசிடிவி கண்காணிப்பை கட்டாயமாக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பரிந்துரைகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் மற்றும் பொதுமக்களிடமிருந்து கருத்துக்களையும் ஆலோசனைகளையும் மத்திய அரசு கோரியுள்ளது. பொதுமக்கள் தங்களது கருத்துக்களையும் பரிந்துரைகளையும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் துணைச் செயலாளருக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்டவணை எச் பிரிவில் உள்ள மருந்துகள், பதிவு செய்யப்பட்ட மருத்துவர் வழங்கும் செல்லுபடியாகும் மருந்துச் சீட்டின் அடிப்படையில் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். அட்டவணை எச்1 என்பது அதன் ஒரு துணைப் பிரிவாகும். இந்த புதிய விதிமுறைகள் மருந்துப் பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மையையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version