நீட் ரகசியம் எனக்கு தெரியும் என உதயநிதி சொன்னது தான் காதுகுத்து – ராஜ்மோகன்

அமைச்சர் ராஜ்மோகன்

திட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் தவெக அரசுக்கு, ‘தாய் மாமன் காது குத்தும் திட்டம்’ என மொத்தமாகப் பெயரிடலாம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி கொடுத்துள்ளார்.

'உண்மையில் நீட் ஒழிப்பு ரகசியம் எனக்குத் தெரியும் என்று உதயநிதி கூறியதுதான் மிகப்பொிய காதுகுத்து' என அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டுள்ளார். மேலும், 'மெரினா கடற்கரைக்கு பூட்டு போட்டதில் கடந்த 5 ஆண்டுகளாக தி.மு.க. அரசு ‘முனைவர் பட்டம்' பெற்றுள்ளது' என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

தற்போது ஆளுங்கட்சி மற்றும் அரசியல் தலையீடு இல்லாமல் காவல்துறை செயல்படுவதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றால் மகளிர் காவல்துறையிடம் செல்லலாம் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். ஆனால், கடந்த தி.மு.க ஆட்சியில் விருகம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பெண் காவல் துறை அதிகாரியிடமே சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார் தி.மு.க உறுப்பினர் என்றும், அவர்களுக்கே பாதுகாப்பில்லாத ஒரு ஆட்சியை நடத்திவிட்டு எங்களை பார்த்து பேசுவதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், குற்றவாளிகள் மீது விஜய் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், சட்டம் – ஒழுங்கில் சிறப்பான இடத்தை நோக்கி தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். அரசியல் தலையீடு இல்லாத நிர்வாகம், ஆளுங்கட்சி தலையீடு இல்லாத காவல்துறை, எந்தக் கட்சியினர் குற்றம் செய்தாலும் நடவடிக்கை எடுக்கும் 'விஜய் சர்கார்’ தற்போது நடந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் வெளியில் தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் பெண்ணின் பெயர், முகவரி, பெற்றோர் பெயர் முதற்கொண்டு அனைத்தையும் முதல் தகவல் அறிக்கையில் வெளியிட்டு மிகப்பெரிய தவறை செய்தது திமுக அரசு என்றும் அமைச்சர் ராஜ்மோகன் குற்றம் சாட்டியுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version