காலா பட நடிகர் நானா படேகர் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் நானா படேகர்

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர், கோவாவில் உள்ள அவரது வீட்டில் திடீரென மயக்கம் அடைந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சுமார் 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக சிபிஆர் சிகிச்சை அளித்தும், அவரை மீண்டும் சுயநினைவுக்கு கொண்டு வர முடியவில்லை. சிகிச்சை பலனின்றி நானா படேகர் உயிரிழந்தார்.

திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட இவர், ஒரு முன்னாள் ராணுவ அதிகாரியும் ஆவார். 1978 ஆம் ஆண்டு 'கமன்' திரைப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமான நானா படேகர், 'சலாம் பாம்பே' மற்றும் 'பரிந்தா' போன்ற படங்களின் மூலம் பரவலான பெயரைப் பெற்றார். குறிப்பாக, 'பரிந்தா' திரைப்படம் அவரது திரையுலக வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து 'அங்கார்', 'திரங்கா', 'கிராந்திவீர்', 'அக்னி சாக்ஷி', 'காமோஷி: தி மியூசிக்கல்', 'யஷ்வந்த்', 'அப் தக் சப்பன்', 'அபஹரன்' மற்றும் 'ராஜ்நீதி' போன்ற பல படங்களில் தனது அழுத்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். வில்லன் மற்றும் தீவிரமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த இவர், 'வெல்கம்' திரைப்படத்தில் தனது நகைச்சுவை நடிப்பையும் வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார்.

தமிழில், இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘பொம்மலாட்டம்’ திரைப்படத்திலும், பா. ரஞ்சித் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

நானா படேகரின் சிறப்பான நடிப்புத் திறனுக்காக இதுவரை 3 தேசிய விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், 2013 ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருதையும் பெற்றுள்ளார். இவருக்கு மனைவி நீலகாந்தி படேகர் உள்ளார், ஆனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு மல்ஹர் படேகர் என்ற மகனும் உள்ளார்.

மஹாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளின் நலனுக்காக 'நாம் பவுண்டேஷன்' என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் பல்வேறு நற்பணிகளைச் செய்து வந்தவர் நானா படேகர். அவரது மறைவு திரையுலகிலும், ரசிகர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நானா படேகரின் திடீர் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது என பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version