மிசா தழும்புடன் மு.க.ஸ்டாலின்: கலங்கியபடி திமுக தலைவர் பேச்சு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மிசா சட்டத்தின் போது ஏற்பட்ட தழும்பு இன்றும் தன் கையில் இருப்பதாக உருக்கமாக தெரிவித்தார். சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற கலாநிதி வீராசாமி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், சிறைச்சாலையில் தனக்கு அறிவுரை வழங்கியவர் ஆற்காடு வீராசாமி என்றும் குறிப்பிட்டார்.

முதல்வராக இருப்பவர்களைப் பார்த்து நான் கேட்பதெல்லாம், தயவுசெய்து உங்களைப் பற்றியும், உங்கள் ஆட்சியைப் பற்றியும் வரும் செய்திகளைப் படியுங்கள். அதில் உள்ள உண்மைகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுங்கள். நாட்டில் நடக்கும் அக்கிரமங்கள் அனைத்தும் செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஒரு தேர்தல் தோல்வியால் ஒரு கட்சி காணாமல் போகலாம். ஆனால் 75 ஆண்டுகால கொள்கைக்காக பாடுபடும் இயக்கம் திமுக. ஒரு மாநில கட்சி எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி நாம் இருக்கிறோம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடும் இயக்கம் திமுக.

நமக்கெல்லாம் துணையாக அண்ணன் ஆற்காட்டார் இருந்து கொண்டிருக்கிறார். சிறைச்சாலையில் ஒவ்வொரு நாளும் எனக்கு அறிவுரை வழங்கியவர் அவர். இன்றும் மிசா தழும்பு என் கையில் உள்ளது. வைரம் பாய்ந்த தொண்டர் அண்ணன் ஆற்காட்டார் என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

திமுகவின் கொள்கை வலிமையையும், மக்களுக்கான அதன் தொடர் சேவையையும் ஸ்டாலின் இந்த உரையில் வலியுறுத்தினார். மிசா கால அனுபவங்களையும், ஆற்காடு வீராசாமியின் ஆதரவையும் அவர் நினைவுகூர்ந்தது, கட்சியின் நீண்டகால போராட்டப் பயணத்தை எடுத்துக்காட்டியது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version