திமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வர்: அமைச்சர் நிர்மல்குமார்

திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க தற்போது வரை முயற்சி செய்கின்றனர் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தமிழ்நாட்டின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா கர்நாடகாவைச் சேர்ந்தவர் அல்ல, அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். கர்நாடகாவில் அவர் தொழில்களை மட்டுமே செய்கிறார்' என்று கூறினார்.

மேலும், 'திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சியமைக்க முயற்சி செய்கின்றன. ஆனால், இதற்கு திமுக எம்எல்ஏக்களே உடன்படவில்லை. திமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை' என்றும் அமைச்சர் நிர்மல்குமார் குறிப்பிட்டார். மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோர் குதிரை பேரத்தில் ஈடுபடுவதால்தான் கூட்டணிக் கட்சியினர் வெளியேறுகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

மதிமுக எம்எல்ஏக்களை அவர்களின் கட்சிக் கூட்டத்துக்குக் கூட செல்லவிடாமல் தடுத்தது யார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இஸ்லாமியருக்கு எதிரான மதுரை அமர்வின் தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

மதம் மாறியவருக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் என சாதி சான்றிதழ் வழங்கும் அரசாணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்ததை எதிர்த்தும் மேல்முறையீடு செய்யப்படும் என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version