மீனம் ராசிபலன்: குருவின் உச்சத்தால் சுப நிகழ்ச்சிகள் அதிகரிக்கும்

மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தெய்வ கடாட்சம் நிறைந்ததாக இருக்கும். ராசி அதிபதி குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சமடைந்து பலம் பெறுவதால், உங்கள் சமயோஜித பேச்சால் தடைபட்ட வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். புத்திர பாக்கியம், சுப காரிய நிகழ்ச்சிகள் போன்றவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பெண்களுக்கு தாய் வழிப் பாட்டியின் நகைகள், பணம், பட்டுப் புடவைகள் சீதனமாக கிடைக்கும். சிலர் நவீன வெளிநாட்டு செல்போன்களையும் வாங்குவீர்கள்.

படிப்பை பாதியில் நிறுத்திய மாணவ மாணவிகளுக்கு மீண்டும் கல்வியைத் தொடரும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அசையும், அசையாச் சொத்து தொடர்பான முயற்சிகள் கைகூடும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். பிள்ளைகளுக்கு தொழில், உத்தியோகம், திருமணம், குழந்தை என அனைத்து விதமான சுப பலன்களும் நடக்கும்.

தந்தை-மகன் உறவு பலப்படும். பல தலைமுறைகளாக விற்காமல் இருந்த பூர்வீகச் சொத்துகள் விற்கும். தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். பிரிந்திருந்த கணவன்-மனைவி மீண்டும் சேர்ந்து குடும்பம் நடத்துவார்கள். ஒட்டாமல் இருந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள்.

பிரதோஷ நாளன்று பாலபிஷேகம் செய்து சிவனை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். மேலும் தகவல்களுக்கு 'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தியை 98652 20406 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version