மீனம் ராசிபலன்: ஜூன் 14-20, 2026 – யோகமும் சவால்களும்

மீனம் ராசிக்காரர்களுக்கு ஜூன் 14 முதல் ஜூன் 20, 2026 வரையிலான வாரம் விபரீத ராஜயோக காலமாக அமையும். ராசி அதிபதி குருபகவான், அஷ்டமாதிபதி சுக்கிரனுடன் இணைந்துள்ளார். இதனால் ஜோதிடம், கலைத்துறை, வங்கித்துறை, பங்குச்சந்தை, வணிகம் போன்ற பல்வேறு துறைகளில் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் வருமானம் பெருகும். எதிர்பாராத யோகத்தால் அதிர்ஷ்டம் உங்களை வந்து சேரும். லாட்டரி, உயில் சொத்து, பங்குச்சந்தை ஆதாயங்கள் மூலம் திடீர் பண வரவு உண்டு. நீங்கள் தொட்டது அனைத்தும் துலங்கும். சிறிய உழைப்பில் பெரிய வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உருவாகும்.

குலதெய்வ அனுகிரகம், பூர்வீகச் சொத்துக்களால் ஆதாயம் போன்ற நற்பலன்கள் ஏற்படும். இருப்பினும், சிலருக்கு தவறான காதல் உறவுகள் அல்லது பங்குச்சந்தை முதலீடுகளால் வாழ்க்கைப் பாதை மாறக்கூடும். வாடகை வருமானம் தரக்கூடிய சொத்துக்கள் சிலருக்கு அமையலாம். அலைச்சல் மற்றும் டென்ஷன் சற்று அதிகமாக இருக்கும்.

தொழில் நிமித்தமாக குறுகிய காலம் குடும்பத்தை பிரிந்து வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல நேரிடலாம். ஜென்மச் சனியால் திருமணத்திற்கு தடை ஏற்படாது. கோச்சாரம் சாதகமாக இருப்பதால், அதிகப்படியான திருமணங்கள் நிச்சயமாகும். வியாழக்கிழமைகளில் கடலை உருண்டை தானம் செய்வது நல்லது. 'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்திசெல்: 98652 20406.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version