செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திமுக வேட்பாளர் வழக்கறிஞர் பரந்தாமனை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில், இன்று காலை வேடந்தாங்கல் ஏரியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஏரியின் ஒரு பகுதியில் இருந்து 'காப்பாத்துங்க' என்ற அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அந்தப் பகுதிக்குச் சென்று பார்த்தபோது, புதை சேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் ஒரு இளைஞர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இரவு முழுவதும் சேற்றில் சிக்கி தவித்த அந்த இளைஞரின் நிலையை கண்ட மா.சுப்பிரமணியன், உடனடியாக அப்பகுதி மக்களின் உதவியுடன் அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டு, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் அவர் விரிவாக விசாரித்தார். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உயிருக்குப் போராடிய இளைஞரைக் காப்பாற்றிய மா.சுப்பிரமணியனுக்கு இளைஞரின் குடும்பத்தினர் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். வேடந்தாங்கல் ஏரியின் புதை சேற்றில் சிக்கி தவித்த இளைஞரை, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏரியில் புதைசேற்றில் சிக்கிய இளைஞரை மீட்ட முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Senior Reporter
Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை
