ஆஸ்துமா நோயால் அவதிப்படுவோருக்கு ஒரு நற்செய்தி! தினமும் கிவி பழத்தை உட்கொண்டு வந்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம். கிவி பழங்கள் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிக அளவில் வழங்குகின்றன. இதில் வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஈ, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
மேலும், கிவி பழம் இரத்த உறைதலைத் தடுக்கும் தன்மை கொண்டது. இது இதய சம்பந்தமான பிரச்சனைகள் வருவதிலிருந்தும் நம்மைக் காக்கிறது. பழங்களிலேயே அதிக சத்துக்கள் கொண்ட பழமாக கிவி திகழ்கிறது. இதில் மொத்தம் 9 வகையான சத்துக்கள் அடங்கியுள்ளன.
வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு கிவி பழங்களை அதிகமாகக் கொடுப்பதன் மூலம், அவர்கள் ஆரோக்கியமாகவும் நோயின்றியும் வளர உறுதுணையாக இருக்கும். குறிப்பாக, கிவி பழத்தில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது.
உணவுக்குப் பிறகு செரிமான சக்தியை மேம்படுத்த கிவி பழத்தை சாப்பிடலாம். புற்றுநோய் செல்கள் வளர்வதைத் தடுப்பதிலும் இந்த பழம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
கிவி பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வதால், பார்வைத்திறன் மேம்படும். மேலும், இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டைத் திறம்பட மேம்படுத்துகிறது.
ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் இந்த கிவி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நோய் விரைவில் குணமடையும். உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் இந்த பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடை குறைந்து சீரான உடல்வாகு பெறலாம்.

