கேரள முதல்வர் பதவியேற்பு: ஸ்டாலினுக்கு அழைப்பு!

கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 102 இடங்களை அக்கூட்டணி கைப்பற்றியுள்ளது.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, கேரளாவின் அடுத்த முதலமைச்சராக விடி சதீஷன் இன்று சட்டமன்றக் குழு தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வரும் திங்கட்கிழமை அன்று அவர் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த முக்கிய நிகழ்வில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். மேலும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சிறப்பு அழைப்பாளராக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது இரு மாநில உறவுகளுக்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version