வெற்றி, தோல்வி, ஜால்ரா வரும்: கமல்ஹாசன் பேச்சு

தனியார் நிகழ்ச்சியில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்பி

வெற்றி வரும், தோல்வி வரும், அதோடு ஜால்ராவும் வரும். இவையனைத்தையும் புறந்தள்ளிவிட்டு வளர்ச்சிப் பாதையில் பயணித்தவர்கள்தான் பாரதிராஜா, பாக்யராஜ் போன்றோர் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்பி தெரிவித்துள்ளார்.

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்திய சினிமா உலகிலேயே அதிக திரைப்படங்களைத் தயாரிக்கும் நாடு இந்தியா என்றும், அரசுகளின் உதவியுடன் சினிமாவை மேலும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்தியாவின் மிகப்பெரிய விருதை ஒரு திரைப்படத் தொழிலாளி பெறும் நாளை நேரில் காண வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், 'வெற்றி வரும், தோல்வி வரும்; அதோடு ஜால்ராவும் வரும். இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு வளர்ச்சிப் பாதையில் பயணித்தவர்கள்தான் பாரதிராஜா, பாக்யராஜ்' என்று குறிப்பிட்டார்.

இயக்குநர் பாரதிராஜாவைப் பற்றிப் பேசும்போது, 'பாரதிராஜா தனி மனிதர் அல்ல; சினிமாவில் ஒரு பெரிய குடும்பம். அவரை வெறும் இயக்குநர் என்று எப்படி சொல்வது? அவர் என் குடும்பம். பலமுறை என் வீட்டில் வந்து படுத்து தூங்கியிருக்கிறார்' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மேலும், பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் ஆகிய இருவருடனும் பணியாற்றியவன் என்பதில் பெருமை கொள்வதாகவும், இருவரும் தமிழ் சினிமாவின் அடையாளங்கள் என்றும், தமிழ் சினிமாவில் ஆழமாக வேரூன்றியவர்கள் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

பாரதிராஜா தனிப்பட்ட முறையில் தனக்கு மிகப்பெரிய ஊக்கம் அளித்தவர் என்றும், தோல்விகளுக்கு அஞ்சாதவர் என்றும் அவர் புகழாரம் சூட்டினார். இயக்குநர் கே.பாலசந்தர், 'பாரதிராஜா போல ஒரு கலைஞன் இல்லை' என்று கூறுவார் என்றும், அப்படிப்பட்ட ஜாம்பவான்களுடன் பயணித்தது தனக்கு பெருமை என்றும் கமல்ஹாசன் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version