ரூ.60 ஆயிரத்தில் 90 கி.மீ மைலேஜ் தரும் Joy e-bike Gen Nxt!

Joy e-bike Gen Nxt இ-ஸ்கூட்டர்

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், ஓலா, ஏதர் போன்ற முன்னணி நிறுவனங்களுக்குப் போட்டியாக Joy நிறுவனம் தனது புதிய Joy e-bike Gen Nxt இ-ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. பட்ஜெட் விலையில் சிறப்பான மைலேஜ் வழங்கும் இந்த ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது.

Joy e-bike Gen Nxt இ-ஸ்கூட்டரின் விலை ரூபாய் 60 ஆயிரத்து 267 முதல் தொடங்குகிறது. இந்த ஸ்கூட்டர் மொத்தம் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. முதல் வேரியண்ட்டான Gen Nxt Nanu-வின் விலை ரூபாய் 60 ஆயிரத்து 267 ஆகும். அடுத்ததாக, Gen Nxt Eco வேரியண்ட் ரூபாய் 68 ஆயிரத்து 367 விலையிலும், Gen Nxt Nanu + வேரியண்ட் ரூபாய் 74 ஆயிரத்து 803 விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளன.

இந்த Joy e-bike Gen Nxt இ-ஸ்கூட்டரின் முக்கிய சிறப்பம்சமே அதன் மைலேஜ் தான். முதல் வேரியண்ட் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 90 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். மற்ற இரண்டு வேரியண்ட்களும் 88 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் திறன் கொண்டவை. இந்த ஸ்கூட்டர்களில் 1.86 கிலோவாட் மற்றும் 2.18 கிலோவாட் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், மூன்று வேரியண்ட்களிலும் போர்ட்டபிள் பேட்டரி வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

Gen Nxt Eco மற்றும் Gen Nxt Nanu + ஆகிய கடைசி இரண்டு வேரியண்ட்களில் எகோ, ஸ்போர்ட் மற்றும் ஹைப்பர் என மூன்று விதமான ரைடிங் மோடுகள் உள்ளன. கடைசி வேரியண்ட்டில் ப்ளூடூத் இணைப்பு, ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி, மற்றும் லைவ் சார்ஜிங் ஸ்டேட்டஸ் போன்ற நவீன வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்கூட்டர் 140 கிலோ வரை எடை தாங்கும் திறன் கொண்டது. கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரு வண்ணங்களில் இது கிடைக்கிறது.

வேகத்தைப் பொறுத்தவரை, முதல் வேரியண்ட்டான Gen Nxt Nanu அதிகபட்சமாக மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். Gen Nxt Eco வேரியண்ட் மணிக்கு 46 கிலோமீட்டர் வேகத்திலும், கடைசி வேரியண்ட்டான Gen Nxt Nanu + மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்திலும் பயணிக்கக்கூடியது. மேலும், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த Joy e-bike Gen Nxt இ-ஸ்கூட்டரில் BLDC மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்பக்க பிரேக் டிஸ்க் வகையிலும், பின்பக்க பிரேக் ட்ரம் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் 10 இன்ச் அளவுள்ள சக்கரங்கள் மற்றும் ட்யூப்லெஸ் டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சஸ்பென்சனைப் பொறுத்தவரை, முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் டைப் சஸ்பென்சனும், பின்பக்கத்தில் டூயல் அட்ஜஸ்ட் ஷாக் அப்சார்பர் சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வாகனம் வெறும் 70 கிலோ எடை மட்டுமே கொண்டது. பேட்டரிக்கு 3 வருடங்கள் அல்லது 60 ஆயிரம் கிலோமீட்டர் வரை வாரண்டி வழங்கப்படுகிறது. டிஜிட்டல் டிஸ்ப்ளே, ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், மற்றும் ட்ரிப் மீட்டர் போன்ற வசதிகளும் இதில் அடங்கும்.

கூடுதல் சிறப்பம்சங்களாக, லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், செல்ஃப் ஸ்டார்ட், ஆன்டி தெஃப்ட் சிஸ்டம், ரிவர்ஸ் மோட், பகலில் எரியும் பகல்நேர விளக்குகள், மற்றும் LED சிக்னல் விளக்குகள் போன்ற வசதிகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், டிக்கி வசதியும் இதில் உள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version