20% கமிஷன்: ஜோசப் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

புதிய அரசியல் மற்றும் ஊழலற்ற நிர்வாகம் என மேடைகளில் சினிமா பாணியில் பேசி ஆட்சிக்கு வந்த விஜய் தலைமையிலான தவெக அரசின் உண்மை முகம், ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே தொடர்ந்து அம்பலமாகி வருவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணிகளுக்கு, தவெக பெண் எம்.எல்.ஏ. குழந்தை ராணி 20 சதவீதம் கமிஷன் கேட்டு ஒப்பந்ததாரர்களை மிரட்டுவதாகவும், அப்பணிகளை தவெக நிர்வாகிகளுக்கே தாரைவார்க்க முடிவெடுத்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து நியாயம் கேட்க சென்ற ஒப்பந்ததாரர்களை அவமானப்படுத்தி விரட்டியடித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த '20 சதவீத கமிஷன் மாடல்' தான் ஜோசப் விஜய் தமிழ்நாட்டு மக்களுக்குத் தரும் மாற்றமா? என நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக இடைவெளியைப் பயன்படுத்தி, மற்ற ஒப்பந்ததாரர்களை புறக்கணித்து தவெக எம்.எல்.ஏ-க்களும் நிர்வாகிகளும் கமிஷன் வசூலில் ஈடுபடுவது அப்பட்டமான விதிமீறல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

'ஊழலை ஒருபோதும் சகிக்க மாட்டோம்' என முழங்கிய ஜோசப் விஜய், சிவகங்கை தவெக பெண் எம்.எல்.ஏ. மீதான 20 சதவீதம் கமிஷன் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? அவரது தொடர் மௌனம் இந்த பகற்கொள்ளைக்கு தலைமை தரும் சம்மதமா? என்றும் அவர் வினவியுள்ளார்.

கிராமப்புற வளர்ச்சிக்கு மத்திய அரசு ஒதுக்கும் மக்களின் வரிப்பணத்தில் 20 சதவீதம் கமிஷன் வசூலிக்கும் தவெக எம்.எல்.ஏ. மீது லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். ஜனநாயக முறையில் டெண்டர் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தவெக அரசு இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால், வரும் காலங்களில் தமிழக மக்கள் அவர்களை முற்றிலும் புறக்கணிப்பார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version