ஜிப்மர் மாணவி தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது!

ஜிப்மர் மருத்துவமனையில் எம்.டி. இறுதியாண்டு மாணவி யோகலட்சுமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது அறையில் இருந்து மீட்கப்பட்ட கடிதம்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் எம்.டி. இறுதியாண்டு படித்து வந்த மாணவி டாக்டர் யோகலட்சுமி (26) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், அவர் சோர்வுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு பெற்றோர் மற்றும் தாய் தந்தையுடன் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு தூங்கச் சென்றார்.

மறுநாள் காலை வெகுநேரமாகியும் மாணவி அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், கதவை தட்டியுள்ளனர். ஆனால், மாணவி கதவைத் திறக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் படுக்கையில் இறந்து கிடந்துள்ளார்.

அவரது அருகே காலியான மயக்க மருந்து பாட்டில், சர்க்கரை நோய்க்கான இன்சுலின் மருந்து பாட்டில்கள் 9 மற்றும் 3 ஊசிகள் கிடந்துள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகடை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உடலில் மயக்க மருந்து மற்றும் சர்க்கரை நோய்க்கான இன்சுலின் மருந்தை ஊசி மூலம் செலுத்திக் கொண்டு மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

மேலும், போலீசார் நடத்திய சோதனையில், மாணவி யோகலட்சுமி அறையில் இருந்த டைரியில் அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது. அந்தக் கடிதத்தில், 'தற்கொலை முடிவை நானே எடுத்ததாகவும், இதற்காக யாரையும் துன்புறுத்த வேண்டாம் என்றும், இந்த முடிவுக்காக பெற்றோர் மற்றும் நண்பர்கள் தன்னை மன்னிக்க வேண்டும்' என்றும் எழுதியிருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி வெங்கட்டா நகர் 2-வது குறுக்குத்தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வேளாண் துறை அதிகாரி வாசுதேவன் (68) மற்றும் அவரது மனைவி விமலா (55) ஆகியோரின் மகள்தான் டாக்டர் யோகலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version