ஜெயிலர் 2: 39 வருடங்களுக்குப் பின் ரஜினி – ஹிருத்திக் இணைந்தனர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் முக்கிய நடிகர்கள் தொடரும் நிலையில், சுராஜ் வெஞ்சரமூடு போன்ற புதிய நட்சத்திரங்களும் இப்படத்தில் இணையவுள்ளனர்.

'ஜெயிலர் 1' பாகத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் நடித்திருந்தனர். இதேபோல், 'ஜெயிலர் 2' படத்திலும் பல பிரபலங்கள் கேமியோ ரோல்களில் நடிக்கின்றனர்.

முதலில், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க படக்குழு முயற்சித்தது. ஆனால், அது கைகூடவில்லை. தற்போது, ஷாருக்கானுக்கு பதிலாக பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் 'ஜெயிலர் 2' படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவியுள்ளது.

இதன் மூலம், கிட்டத்தட்ட 39 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்துடன் ஹிருத்திக் ரோஷன் இணைந்து நடிக்க உள்ளார். 1986 ஆம் ஆண்டு வெளியான 'பகவான் தாதா' திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அதில், குழந்தை நட்சத்திரமாக ஹிருத்திக் ரோஷன், ரஜினிகாந்தின் வளர்ப்பு மகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version