இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம்: கர்னூலில் திறப்பு!

இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி பகுதியில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த சுரங்கம் துக்​காலி மண்​டலத்தில் அமைந்துள்ளது.

திறப்பு விழாவில் பங்கேற்ற முதல்வர் சந்​திர​பாபு நாயுடு, 'ராயல சீமா பகு​தியை ரத்​தின சீ​மா​வாக மாற்​று​ம் நடவடிக்கை ஜொன்​னகிரி​யில் தொடங்க உள்​ளது. இப்​பகு​தியை முன்பு ‘சுவர்​ணகிரி’ என்று அழைத்​தனர்' என குறிப்பிட்டார். மேலும், அசோகச் சக்​கர​வர்த்​தி​யின் நான்காவது தலைநகரமாக ஜொன்னகிரி விளங்கியது என்றும், அக்காலத்தில் இங்கு சாலைகளில் ரத்​தினக் கற்​கள், தங்​கம் போன்​றவற்றைக் கொட்டி விற்பனை செய்ததாக அசோகர் காலத்துச் சாசனங்​கள் தெரிவிக்​கின்​றன என்றும் அவர் கூறினார்.

முன்னதாக கேஜிஎஃப் (கோலார் தங்கச் சுரங்கம்) குறித்து நாடு முழுவதும் பேசப்பட்டது. ஆனால் இப்போது ஜொன்னகிரி குறித்து நாடு முழுவதும் பேசப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு ஒரு டன் தங்கம் வெட்டி, சுத்​தம் செய்​யப்​படும். தொடக்கத்தில் 400 கிலோவாக இருக்கும்; பின்னர் போகப்​போக 1,000 கிலோ என்ற நிலையை எட்டும் என முதல்வர் நாயுடு தெரிவித்தார். தற்போது இங்கு 800 பேர் பணி​யாற்​றுகின்​றனர். விரைவில் புதிதாக 1,500 பேர் நியமனம் செய்​யப்​படு​வர். வருங்காலத்தில் இங்கு ஊழியர்களின் எண்ணிக்கை 5,000ஆக உயரும் என்றும் அவர் கூறினார்.

ஜொன்​னகிரி ஆந்​தி​ரா​வின் அடையாளமாக மாறும் என்றும், அங்கு நகைக்கடைகள் அமைக்​கப்​படும் என்றும் திரு நாயுடு கூறினார். ஆந்​தி​ரா​வில் தொழில் தொடங்க பலர் முன்வரு​வதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தியாவிலேயே மிகப்​ பெரிய ‘டிரோன் சிட்டி’ ஆந்​தி​ரா​வில் அமை​கிறது. விரை​வில் கர்னூலில் உயர் நீதி​மன்றக் கிளை செயல்படவுள்ளது. 2028ல் ராயல சீமாவில் இரும்புத் தொழிற்​சாலை அமை​யும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version