ஹோண்டா CB350C: 577 கி.மீ மைலேஜ் தரும் கம்பீர பைக்!

ஹோண்டா CB350C பைக்

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, தனது கம்பீரமான பைக்குகளுக்கு பெயர் பெற்றது. அந்த வகையில், ஹோண்டா நிறுவனத்தின் தனித்துவமான மாடல்களில் ஒன்றான Honda CB350C, வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பைக் மூன்று விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவை: Honda CB350C Special Edition, இதன் விலை ரூபாய் 2 லட்சத்து 41 ஆயிரத்து 577 ஆகவும், Honda CB350C DLX, இதன் விலை ரூபாய் 2 லட்சத்து 24 ஆயிரத்து 482 ஆகவும், மற்றும் Honda CB350C DLX Pro, இதன் விலை ரூபாய் 2 லட்சத்து 45 ஆயிரத்து 230 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த Honda CB350C பைக், 348.36 சிசி எஞ்சின் திறனுடன் வருகிறது. இதன் எடை 186 கிலோ ஆகும். இருக்கை உயரம் 800 மி.மீட்டர் என வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 5 கியர்கள் பொருத்தப்பட்டுள்ளன. 5 ஆயிரத்து 500 ஆர்பிஎம் ஆற்றல் மற்றும் 29.5 என்எம் டார்க் இழுவிசையுடன், இந்த பைக் கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 130 கிலோமீட்டர் ஆகும்.

Honda CB350C பைக்கில் 15.2 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் வசதி உள்ளது. இது லிட்டருக்கு 38 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது. ஒரு முறை முழுமையாக பெட்ரோல் நிரப்பினால், சுமார் 577.6 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். மேலும், இதன் இருக்கை உயரம் 800 மி.மீட்டர் ஆகவும், ரிசர்வ் டேங்க் கொள்ளளவு 3 லிட்டர் ஆகவும் உள்ளது.

இந்த பைக்கில் ஒரு கியர் கீழ்நோக்கியும், மற்ற நான்கு கியர்கள் மேல்நோக்கியும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி, பிஎஸ்6 பாஸ் 2 பி எமிஷன் ஸ்டாண்டர்ட், மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற நவீன அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வசதி, அலாய் சக்கரங்கள், முன்பக்கம் 19 இன்ச் மற்றும் பின்பக்கம் 18 இன்ச் சக்கரங்கள், ட்யூப்லெஸ் டயர்கள் ஆகியவை இதன் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.

சஸ்பென்ஷன் அமைப்பைப் பொறுத்தவரை, முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபர்னட் ஃபோர்க்ஸ் மற்றும் பின்பக்கத்தில் ப்ரஸரிஸ்ட் நைட்ரோஜன் சார்ஜ்ட் சஸ்பென்சன் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இருக்கையின் நீளம் 687 மி.மீட்டர் ஆகும். மேலும், 3 லிட்டர் ரிசர்வ் டேங்க் வசதியும் இதில் உள்ளது.

Honda CB350C பைக், 42 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 3 வருடங்களுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது. செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், பிரைட்னஸ் கண்ட்ரோல் வசதி, மொபைல் போன் இணைப்பு, ஜிபிஎஸ் வசதி, ரியல் டைம் மைலேஜ் இண்டிகேட்டர், அனலாக் ஸ்பீடோமீட்டர், டிஜிட்டல் ஓடோமீட்டர், டிஜிட்டல் ப்யூல் கேஜ், டிஸ்டன்ஸ் டூ எம்டி வசதி, வாய்ஸ் அசிஸ்ட், டிஜிட்டல் ட்ரிப்மீட்டர், ஸ்டாண்ட் அலாரம், கியர் இண்டிகேட்டர், லோ பேட்டரி, லோ ஃபியூல், லோ ஆயில் இண்டிகேட்டர்கள், நேரக் காட்சி, ட்ராக்ஷன் கண்ட்ரோல், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், சைட் ஸ்டாண்ட் என்ஜின் கட்-ஆஃப் வசதி, செல்ஃப் ஸ்டார்ட், சைலன்சர் கவர், கில் ஸ்விட்ச் போன்ற பல நவீன வசதிகள் இந்த பைக்கில் இடம்பெற்றுள்ளன.

மேலும், எல்இடி முகப்பு விளக்குகள், எல்இடி பிரேக்/டெயில் விளக்குகள், ஹசார்ட் வார்னிங் விளக்குகள், பாஸ் விளக்குகள், சிக்னல் விளக்குகள் என அனைத்து விளக்குகளும் எல்இடி தொழில்நுட்பத்தில் வந்துள்ளன. இந்த அனைத்து வசதிகளையும், சிறப்பம்சங்களையும் கருத்தில் கொள்ளும்போது, Honda CB350C ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version