அசாம் மாநில முதல்-மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் தேர்வு

அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. 126 தொகுதிகளை கொண்ட அசாம் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 102 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 82 இடங்களை கைப்பற்றியது. அங்கு பாஜக ஹாட்ரிக் வெற்றியை பெற்று முத்திரை பதித்தது.

இந்தநிலையில் அசாம் முதல்-மந்திரி ஹிமந்த்பிஸ்வ சர்மா இன்று தேர்வு செய்யப்பட்டார். பாஜக மற்றும் அதன் கூட்டணி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஹிமந்த மிஸ்வா, பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதை போல தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற குழு தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

ஹிமந்த பிஸ்வா வருகிற 12-ம் தேதி அசாம் முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார். அவர் தொடர்ந்து 2-வது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளார். பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பாஜக ஆளும் முதல்-மந்திரிகள், துணை முதல்-மந்திரிகள் கலந்துகொள்கிறார்கள்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version