ஹீரோ ஜூம் 125: 264 கி.மீ மைலேஜ் தரும் ஸ்கூட்டர்!

புதிய ஹீரோ ஜூம் 125 ஸ்கூட்டர்

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ, தனது புதிய ஜூம் 125 (Hero Xoom 125) ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர் அதன் சிறப்பான மைலேஜ் மற்றும் நவீன வசதிகளால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது.

ஹீரோ ஜூம் 125 ஸ்கூட்டர் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. அதன் விலை விவரங்கள் பின்வருமாறு: VX வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 4 ஆயிரத்து 602 ஆகவும், ZX வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 13 ஆயிரத்து 529 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைகள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது.

மைலேஜ் மற்றும் செயல்திறனைப் பொறுத்தவரை, இந்த ஸ்கூட்டர் தனித்து நிற்கிறது. VX வேரியண்ட்டில் ட்ரம் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இது நீலம், சாம்பல், மஞ்சள் மற்றும் சிவப்பு போன்ற கவர்ச்சிகரமான வண்ணங்களில் கிடைக்கிறது. 125 சிசி எஞ்சினுடன் வரும் இந்த ஸ்கூட்டர், 9.8 பிஎச்பி குதிரைத்திறனையும், 10.4 என்எம் டார்க் இழுவிசையையும் வழங்குகிறது. இதன் மூலம், அதிகபட்சமாக மணிக்கு 95 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும்.

இந்த ஸ்கூட்டரின் முக்கிய சிறப்பம்சமாக அதன் மைலேஜ் உள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 52.8 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் இந்த ஸ்கூட்டரில், ஒரு முறை பெட்ரோல் டேங்க்கை முழுமையாக நிரப்பினால் சுமார் 264 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். இது பிஎஸ்6 பாஸ் 2 எமிஷன் தரநிலைகளுக்கு இணங்க தயாரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களில், ஐபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், அலாய் சக்கரங்கள், முன்பக்கம் மற்றும் பின்பக்கம் 14 இன்ச் சக்கரங்கள், ட்யூப்லெஸ் டயர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷனும், பின்பக்கத்தில் சிங்கிள் சைட் ஷாக் அப்சார்பர் வித் அட்ஜஸ்டர் சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளது.

ஹீரோ ஜூம் 125 ஸ்கூட்டரின் எடை 120 கிலோ ஆகும். இருக்கை உயரம் 777 மி.மீட்டர், கிரவுண்ட் கிளியரன்ஸ் 164 மி.மீட்டர் என அமைந்துள்ளது. இதன் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 5 லிட்டர் மற்றும் ரிசர்வ் டேங்க் கொள்ளளவு 1.25 லிட்டர் ஆகும். வாடிக்கையாளர்களுக்கு 50 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 5 வருடங்களுக்கு வாகன வாரண்டியும் வழங்கப்படுகிறது.

நவீன வசதிகளைப் பொறுத்தவரை, எல்சிடி டிஸ்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ப்ளூடூத் மூலம் மொபைல் போன் இணைப்பு, ரியல் டைம் மைலேஜ் இண்டிகேட்டர், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ், டிஸ்டன்ஸ் டூ எம்டி வசதி ஆகியவை இதில் உள்ளன. மேலும், 2 ட்ரிப்மீட்டர்கள், ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி மற்றும் லோ ப்யூல் இண்டிகேட்டர்கள், மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர், கால்/எஸ்எம்எஸ் அலர்ட் போன்ற வசதிகளும் இதில் அடங்கும்.

மேலும், செல்ஃப் ஸ்டார்ட், சைலண்ட் ஸ்டார்ட், எல்இடி ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், எல்இடி பிரேக்/டெயில் விளக்குகள் மற்றும் சிக்னல் விளக்குகள் போன்றவையும் இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களாகும். இந்த ஸ்கூட்டர் வெறும் 7.6 நொடிகளில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version