குஜராத்தில் கொடூரம்: வாடகை பாக்கிக்கு மனைவியையும் மகளையும் பலி கொடுத்த கணவன்!

குஜராத் மாநிலம், மோர்பி பகுதியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. வாடகை பாக்கி செலுத்த முடியாத நிலையில், தனது மனைவியையும், மைனர் மகளையும் வீட்டு உரிமையாளரிடம் பாலியல் உறவுக்கு அனுப்பி வைத்த கொடூர கணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

சுரேந்திரநகரைச் சேர்ந்த இந்தக் குடும்பம், ஆறு மாதங்களுக்கு முன்பு வேலை தேடி மோர்பிக்குக் குடிபெயர்ந்தது. மாத வாடகையாக ரூ.2,000 செலுத்தி வந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களாக வாடகை செலுத்த முடியாததால் நெருக்கடி ஏற்பட்டது. வீட்டு உரிமையாளரின் தொடர் அழுத்தத்தால், கணவன் ஒரு பயங்கர முடிவை எடுத்தான். வாடகை பாக்கிக்கு ஈடாக, தன் மனைவியையும், 15 வயது மகளையும் வீட்டு உரிமையாளரின் பாலியல் இச்சைக்கு இரையாக்க ஒப்புக்கொண்டான்.

இந்தக் கொடூர ஒப்பந்தத்தின்படி, வீட்டு உரிமையாளர் அந்தப் பெண்ணையும், சிறுமியையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இந்த பயங்கர சம்பவம் வெளியில் தெரிந்தபோது, பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் உடனடியாக மோர்பி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கணவன் மற்றும் வீட்டு உரிமையாளர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரைத் தேடி வருகின்றனர்.

சொந்த மனைவியையும், மகளையும் வாடகைக்காகப் பலி கொடுத்த இக்கொடூர சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குடும்பப் பொறுப்புகளை உணராமல், இப்படி ஒரு மிருகத்தனமான முடிவை எடுத்த கணவனின் செயல், மனிதநேயத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கைகள் அவசியம்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version